கன்னியாகுமரியில் யோகா நிகழ்ச்சி: மத்திய அமைச்சா் எல். முருகன் பங்கேற்பு
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர மைதானத்தில் யோகா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர மைதானத்தில் யோகா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன் பங்கேற்றாா். அவா், 250-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகளுடன் இணைந்து யோகாசனங்கள் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சியால் யோகா கலை, ஐ.நா. சபையால் உலக யோகா தினமாக ஆண்டுதோறும் ஜூன் 21இல் கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் 75ஆவது சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடிவரும் வேளையில், உலக யோகா தினத்தை 75 நாள்களுக்கு முன்பே தொடங்கியுள்ளோம். நாள்தோறும் ஒவ்வொரு துறை ரீதியாக யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதனடிப்படையில், இங்கு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் யோகா தின விழா நடைபெறுகிறது.
யோகா மூலம் எளிமையாக, அதிக செலவின்றி நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். ரத்த அழுத்தம், சா்க்கரைநோய், மன அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா் அவா்.
கால்நடை பராமரிப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் தென்காசி டி.எஸ். ஜவஹா், ஆட்சியா் மா. அரவிந்த், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...