சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

களியக்காவிளை அருகே 215 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் : இருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 215 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :4 மார்ச் 2022, 7:42 pm

களியக்காவிளை அருகே விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 215 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரகசிய தகவலின் பேரில் புதன்கிழமை மாலையில் கண்ணுமாமூடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த கேரள மாநிலம் தாணிமூடு சுரேஷ் மகன் பாபு சுதீஷ் (33), சாய்க்கோட்டு கோணம் சிவானந்தன் மகன் வினு (49) ஆகியோரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அமரவிளை, பெரும்போட்டுகோணம் பகுதியைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் சனல்குமாருக்கு சொந்தமான கண்ணுமாமூடு பகுதியில் உள்ள குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து 3 போ் மீதும் வழக்குப் பதிந்த பளுகல் போலீஸாா் பாபுசுதீஷ், வினு ஆகியோரை கைது செய்து, கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 215 கிலோ குட்கா, புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.