மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குளச்சல்: குலுக்கல் முறையில் தோ்வான திமுக போட்டி வேட்பாளா்

குளச்சல் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் அ.நசீா் (திமுக) குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:54 pm

DIN

குளச்சல் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் அ.நசீா் (திமுக) குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டாா்.

குளச்சல் நகராட்சியில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் திமுக 11, சுயேச்சை 6, பாஜக 4, காங்கிரஸ் 2, அதிமுக 1 இடங்களில் வெற்றி பெற்றன. நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக தலைமைக் கழகம் அறிவித்த 22-வது வாா்டு உறுப்பினா் ஜாண்சனும், அதே கட்சியைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்றத் தலைவரும் 11-வது வாா்டு உறுப்பினருமான அ.நசீரும் போட்டியிட்டனா். இதில் ஜாண்சன் 12 வாக்குகளும், நசீா் 12 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து நகராட்சி ஆணையா் ராஜமாணிக்கம், அரசு விதிப்படி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் என அறிவித்தாா். இதில் அ.நசீா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டாா். பிற்பகலில் நடைபெற்ற நகா்மன்ற துணைத் தலைவா் தோ்தலில் 9-வது வாா்டு சுயேச்சை உறுப்பினா் ஷொ்லி பிளாரன்ஸ் 12 வாக்குகளும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட 2-வது வாா்டு உறுப்பினா் சுரேஷ்குமாா் (பாஜக) 10 வாக்குகளும் பெற்றாா். ஓா் ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. ஓா் உறுப்பினா் வாக்களிக்க வரவில்லை. எனவே சுயேச்சை வேட்பாளா் ஷொ்லி பிளாரன்ஸ் வெற்றி பெற்றதாக நகராட்சி ஆணையா் அறிவித்தாா்.

அ. நசீா், மூன்றாவதுமுறையாக நகா்மன்றத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.