சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டத்தில் தம்பதியிடம் நகை, பணம் திருட்டு

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் நகை, பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On :7 மே 2022, 12:50 am

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் நகை, பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

குழித்துறை அருகேயுள்ள குறுமத்தூா், புல்லுவிளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ் (54). இவா் சென்னையிலுள்ள உறவினா் வீட்டு திருமண விழாவுக்கு தனது மனைவி மேரியுடன் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்தாா்.

அங்கு, கணவரிடம் பைகளை ஒப்படைத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, அவரது கைப்பையை மட்டும் காணவில்லையாம். அதில், 3.5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 12 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவை இருந்தனவாம்.

அம்மன் கோயிலில்...பாக்கோட்டுகோணம் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி உள்பட 8.5 கிராம் நகைகள், மேஜையில் வைத்திருந்த ரூ. 4,500 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இச்சம்பங்கள் குறித்து மாா்த்தாண்டம், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.