சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பளுகல் அருகே அம்மன் கோயிலில் நகை திருட்டு

பளுகல் அருகே பத்ரகாளி அம்மன் கோயிலில் நகை, பணத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :7 மே 2022, 12:50 am

பளுகல் அருகே பத்ரகாளி அம்மன் கோயிலில் நகை, பணத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாக்கோட்டுகோணம் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் புதுப்பிப்புப் பணி நடைபெற்று வருவதால், இங்குள்ள அம்மனை தற்காலிகமாக பாலாலய கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தி வருகிறாா்கள். இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின் பாலாலய கோயிலின் கதவை மா்மநபா்கள் உடைத்து, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் தங்கச் சங்கிலி, தங்க பொட்டு, தாலிச்சுட்டி உள்பட 8.5 கிராம் எடையிலான நகைகள், கோயில் மேஜையில் வைத்திருந்த ரூ. 4,500 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கோயில் கமிட்டி செயலா் கே. கோபாலகிருஷ்ணன் (71) அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.