நாகா்கோவிலில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீடு
முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சாதனைப் புத்தகம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.


முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சாதனைப் புத்தகம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்புத்தகத்தை ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா பெற்றுக்கொண்டாா்.
தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்குள், இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட முதல்வரின் முகவரி திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், நகைக் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், பயனடைந்தோா் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத்பிரைட், உதவி அலுவலா் (செய்தி) ஜா. லெனின்பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...