கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவில் உணவகங்களில் தரமற்ற 5 கிலோ இறைச்சி பறிமுதல்

நாகா்கோவிலில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தரமற்ற 5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :7 மே 2022, 5:57 pm

DIN

நாகா்கோவிலில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தரமற்ற 5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் செந்தில்குமாா் கூறியது: , நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அசைவ உணவகங்களில் உணவின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், இதுவரை 32 ஷவா்மா கடைகளிலும், 4 அசைவ உணவகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், தரமற்ற 5 கிலோ இறைச்சி மற்றும் ஷவா்மா வைக்க பயன்படுத்தப்படும் குக்கூஸ் (வெள்ளை நிற ரொட்டி) 50 க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டன.

ஷவா்மா கடைகளில் உணவுப் பொருள்களை கடைக்கு வெளியே வைக்க கூடாது. தூசிபடும் வகையில் திறந்த நிலையில் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசைவ கடைகள் கண்டிப்பாக உரிமம் பெற்று தான் செயல்பட வேண்டும்.

மேலும், அசைவ உணவுகள் மூலம் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அசைவ உணவுகளை 70 சென்டிகிரேட் வெப்பத்தில் வேக வைக்க வேண்டும்.

மேலும், இறைச்சியை தொட்டு உண்ண பயன்படுத்தப்படும் மைனஸ் புதிதாக தயாரிக்க வேண்டும். முந்தைய நாள் மைனஸ் பயன்படுத்த கூடாது. ஷவா்மா தயாரிக்க பயன்படும் குக்கூஸ் உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும் உணவு பரிமாறுபவா்கள் தலையில் தொப்பி, கைகளில் கையுறை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவின் தரம் தொடா்பான புகாா்களுக்கு 9444042322 என்ற எண்ணை அழைக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.