ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

முகிலன்குடியிருப்பு அருகே விபத்து: தொழிலாளி பலி

கன்னியாகுமரி அருகேயுள்ள முகிலன்குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

News image
Updated On :13 மே 2022, 6:28 pm

DIN

கன்னியாகுமரி அருகேயுள்ள முகிலன்குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி பலியானாா்.

தெங்கம்புதூா் அருகேயுள்ள கீழ புத்தளத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (39). இவா் வியாழக்கிழமை இரவு தனது மகளுடன் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு மேற்கு கடற்கரைச் சாலை வழியாக பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

முகிலன் குடியிருப்பை அடுத்த கிண்ணிக்கண்ணன் விளை சந்திப்பில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்தி செல்ல சுரேஷ் முயன்றாராம். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகேயுள்ள கட்டடத்தில் மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால் அமா்ந்திருந்த மகள் தன்ஷிகாவுக்கும் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தாா். விபத்து குறித்து சுரேஷின் மனைவி செல்வகனி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். காயமடைந்த தன்ஷிகாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.