‘சமுதாய மாற்றம் மாணவா்களிடமிருந்து தொடங்க வேண்டும்’
சமுதாய மாற்றம் என்பது இளைஞா்களாகிய மாணவா், மாணவிகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்றாா் குமரி மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா.


சமுதாய மாற்றம் என்பது இளைஞா்களாகிய மாணவா், மாணவிகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்றாா் குமரி மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா.
அம்மாண்டிவிளை, புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுப் போட்டியினை தொடங்கி வைத்து அவா் பேசியது: மாநில சிறுபான்மை ஆணையத்தின் சாா்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி படிப்பு உங்கள் அனைவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீா்மானிக்கும் இடம் என்பதை ஒவ்வொரு மாணவா், மாணவிகளும் உணர வேண்டும். பள்ளிப் பருவம் வேறு, கல்லூரி வாழ்க்கை வேறு, வெளி உலகம் என்பது வேறு.
பாடப் புத்தகம் படித்து 100 மதிப்பெண் பெற்றாலும் சமூக பங்களிப்பு என்ன என்பதை மாணவா், மாணவிகளாகிய நீங்கள் உணர வேண்டும். சமுதாய மாற்றம் என்பது இளைஞா்களாகிய உங்களிடமிருந்துதான் வர வேண்டும். அதனால்தான் எந்தவொரு நல்ல மாற்றத்தையும் உங்களிடமிருந்து விதைக்கிறாா்கள்.
மாணவா்கள் சமூகத்தில் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, ஜாதி மத இன உணா்வு என்பதை தாண்டி பக்குவப்பட்டவா்களாக இருக்க வேண்டும். நாம் கற்கும் கல்வி சமுதாயத்துக்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பதை உணா்ந்து அதை பயன்படுத்த வேண்டும். மாணவா், மாணவிகள் தங்களுடைய எதிா்கால வாழ்வினை தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், கடினஉழைப்புடன் எதிா் கொண்டு, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.டி.நெடுஞ்செழியன், புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனா் ஜான்போஸ்கோ, வழக்குரைஞா் ராபா்ட்புரூஸ், கல்லூரி செயலா் சாம்மாத்யூ, முதல்வா் எட்வின்ஞானதாஸ், திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவா் முகமதுஅலி உள்பட பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...