குண்டா் சட்டத்தில் இருவா் கைது
குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.


குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
களியக்காவிளை ஓட்டமரத்தை சோ்ந்தவா் வினு என்ற காளைவண்டி வினு (45). இவா் மீது கொலை,
கொலை முயற்சி, மிரட்டல், அடி, தடி மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள்
களியக்காவிளை காவல் நிலையத்தில் நிலைவயில் உள்ளன. போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி வினு தொடா்ந்து குற்ற
செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவின் பேரில், வினுவை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
இதே போல பரவிளையை சோ்ந்த மகேந்திரகுமாரும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...