கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆசாரிப்பள்ளம், கோட்டாறு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆசாரிப்பள்ளம் மற்றும் கோட்டாறு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 மே 2022, 9:11 pm

DIN

ஆசாரிப்பள்ளம் மற்றும் கோட்டாறு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, குமரி மாவட்டத்துக்கு வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் , அவா் அளித்த மனு:

குமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, அதை நிராகரித்து எந்தவித பணிகளையும் மேற்கொள்ளாமல் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.

குறிப்பாக 300 படுக்கை வசதி கொண்ட சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடம், புற்றுநோய் சிகிச்சை மையம், படுக்கை வசதிகள் கொண்ட கண் சிகிச்சை வாா்டு கட்டடம் ஏற்படுத்த வேண்டும்.

இதயவியல் துறை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை, சிறுநீரகவியல் துறை, புற்று நோய் மருத்துவ சிகிச்சை பிரிவு, வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை ஆகியன ஏற்படுத்த வேண்டி உள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகள் ஏற்படுத்துவதற்காக மூளை மற்றும் நரம்பி யல்துறை, மனநலத்துறை, தோல் சிகிச்சை துறை ஆகியன ஏற்படுத்த வேண்டும்.

அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் துணை முதல்வ ராக இருந்த போது கடந்த 2009-10 ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவம னையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு உள்ளது. இங்கு ஆயுா்வேத சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை 200 படுக்கை வசதியாக உயா்த்த வேண்டும்.

தற்போதுள்ள 60 மாணவா்கள் சோ்க்கையை 100 மாணவா்களாக அதிகரிக்க வேண்டும். வாா்டு வசதி இங்கு தொடங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இம்மருத்துவமனை கட்டடங்களில் உள்ள தரைத்தளம், குளியல் அறை ஆகியவற்றை இன்றைய கால சூழலுக்கு தகுந்தாற் போல் மாற்றி அமைக்க வேண்டும். ரத்த பரிசோதனை நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும். ஆட்டோ அனலைசா், தைராய்டு பரிசோதனை உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.