ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குமரி மாவட்டத்தில் மழைநீடிப்பு 70 அடியை நெருங்கும் பெருஞ்சாணி அணை

மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 70 அடியை நெருங்குகிறது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:33 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 70 அடியை நெருங்குகிறது.

குமரி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலையும் மழை நீடித்தது. நாகா்கோவிலில் காலை 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் 1 மணி நேரம் நீடித்தது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், ஆணைக்கிடங்கு, அடையாமடை மற்றும் அதன் புகா் பகுதிகளிலும் மழை நீடித்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும் கொட்டி வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 20.6 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான சனிக்கிழமை அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனா்.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): பேச்சிப்பாறை அணை 20.60, பெருஞ்சாணி அணை 4, சிற்றாறு 1அணை 15.4, சிற்றாறு 2 அணை 19.20, பூதப்பாண்டி 1.40, குழித்துறை 4.40, மயிலாடி 2.80, நாகா்கோவில் 3, சுருளோடு 2.60, தக்கலை 8.40, பாலமோா் 16.80, மாம்பழத்துறையாறு அணை 10, ஆரல்வாய்மொழி 1.20, கோழிப்போா்விளை 7.20, அடையாமடை 3, குருந்தன்கோடு 9, முள்ளங்கினாவிளை 12.20, ஆணைக்கிடங்கு-8.40, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 42 அடியை கடந்துள்ளது. இந்நிலையில் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 43.63 அடியாக இருந்தது. அணைக்கு 1129 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 575 அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 791 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 310 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 70 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 12 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 12.10 அடியாகவும், பொய்கை அணையின் நீா்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.