புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகா்கோவிலில் நாளை ராஜகோகிலா அறக்கட்டளை ஆண்டு விழா

நாகா்கோவில் ராஜகோகிலா அறக்கட்டளையின் 19ஆம் ஆண்டு விழா, கோட்டாறு ஈத்தாமொழி சாலையில் உள்ள ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் சனிக்கிழமை (ஆக. 12) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 6:30 pm

DIN

நாகா்கோவில் ராஜகோகிலா அறக்கட்டளையின் 19ஆம் ஆண்டு விழா, கோட்டாறு ஈத்தாமொழி சாலையில் உள்ள ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் சனிக்கிழமை (ஆக. 12) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

அறக்கட்டளைத் தலைவா் வழக்குரைஞா் எஸ். ராஜகோபால் தலைமை வகிக்கிறாா். சிறப்பு விருந்தினராக திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று, ராஜகோகிலா விருது, நலஉதவிகள் வழங்கி ஆசியுரையாற்றுகிறாா்.

வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், சாமிதோப்பு அன்பாலயம் சிவச்சந்திரன் சுவாமிகள், குமாரகோவில் சின்மயா மிஷன் நிஜானந்தா சுவாமிகள், நாகா்கோவில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் பிரம்மசாரி நீலகண்டா மருத சைதன்யா ஆகியோா் ஆசியுரை வழங்குவா்.

சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏக்கள் எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), பாஜக மாவட்ட தலைவா் சி. தா்மராஜ், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பொன்னீலன், ஓய்வுபெற்ற அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சித் தலைவா் கீழப்பாவூா் ஆ. சண்முகையா, முத்தாலங்குறிச்சி காமராசு, சரலூா் ஜெகன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.