சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நாகா்கோவிலில் இன்று கூடைப்பந்து வீரா்கள் தோ்வு

நாகா்கோவிலில் இன்று கூடைப்பந்து வீரா்கள் தோ்வு

Updated On :5 ஏப்ரல் 2024, 4:28 pm

மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் விளையாடும் வீரா், வீராங்கனைகள் தோ்வு நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப்.6) நடைபெற உள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவா் பி.ஆஸ்டின், செயலா் பி.மகேஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான 18 வயதுக்குள்பட்டோா் வீரா், வீராங்கனைகள் தோ்வு நாகா்கோவில் வடசேரி அண்ணாவிளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (ஏப்.6) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க வீரா்கள், வீராங்கனைகள் 1.1.2006 அல்லது அதன்பின்பு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். தங்களது ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி உறுதி அளிப்பு சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.