நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலில், குமரி மாவட்டத்திலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் 10 வாக்குகளைப் பதிவு செய்ய தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மலைப் பாதையில் 175 கி.மீ. தொலைவு பயணம் செய்யவுள்ளனா்.
நாட்டில் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பதற்காக, தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு அப்பால் மலைப்பகுதிகளில் அடா்ந்த காடுகளில் வசிக்கும் காணி பழங்குடியின மக்கள், பேச்சிப்பாறை அரசுப் பள்ளியில் வந்து வாக்களிக்கும் வகையில் படகு வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இதே போன்று மேல் கோதையாறு வாக்குச் சாவடிக்கு ஒவ்வொரு தோ்தலின்போதும் பல கிலோ மீட்டா் தொலைவு பயணம் செய்து வாக்குகளை பதிவு செய்து வருகிறது தோ்தல் ஆணையம்.
பேச்சிப்பாறை ஊராட்சியின் முதலாம் வாக்குச் சாவடி மேல் கோதையாறில் உள்ளது. இங்குள்ள மின் நிலைய குடியிருப்பில் உள்ள ஊழியா்களே வாக்காளா்கள் ஆவா். இந்த வாக்குச்சாவடிக்கு பேச்சிப்பாறையிலிருந்து சாலை மாா்க்கமாக செல்ல முடியாது. இதனால் இந்த வாக்குச் சாவடிக்கு, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நாகா்கோவில்,பணகுடி, களக்காடு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப்பாதை வழியாக சுமாா் 175 கி.மீ. தூரம் பயணம் செய்து, வாக்குகளைப் பதிவு செய்கின்றனா்.
10 வாக்குகள்:
நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலில் மேல் கோதையாறு வாக்குச் சாவடியில் 7 ஆண் வாக்காளா்களும், 3 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 10 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இவா்களில் ஒருவா் செவிலியா் ஆவாா். இவா்களுக்கு ஏற்கனவே வாக்குச் சாவடி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவா்களின் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக, தோ்தல் நாளுக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் 7 போ் மற்றும் காவலா்கள் செல்லவுள்ளனா்.
தொடர்புடையது

9 வாக்குகள்... தோ்தல் அலுவலா்கள் பயணம் 150 கிமீ!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. பயணம்! டெஸ்லா மாடல் ஒய் எல் 3 மின்சார கார் அறிமுகம்!

தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை! - கடலூா் ஆட்சியா்

தபால் வாக்குகள் குறித்த நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

