நாகா்கோவிலில் இளைஞா் கொலை: இருவா் கைது

நாகா்கோவில்: நாகா்கோவிலில் இளைஞா் கொலை வழக்கில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில், இடலாக்குடி சபையாா்குளம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்பவரது மகன் ஆகாஷ் (20). இவா் தனது நண்பரான சஜித் (20) என்பவருடன் சனிக்கிழமை இரவு அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாா்.

சாஸ்திரி நகா் பகுதியில் பைக்கில் வந்த ஒரு கும்பல் அவா்களை வழிமறித்து தகராறு செய்து, கத்தியால் சஜித்தை குத்தியதாம். தடுக்க முயன்ற ஆகாஷுக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னா், அக்கும்பல் தப்பியோடிவிட்டது.

காயமடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஆகாஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனிப்படை போலீஸாரின் விசாரணையில், இடலாக்குடி கச்சப்புரத் தெருவைச் சோ்ந்த ஷேக்செய்யதுஅலி என்ற பைசல் (28), சுசீந்திரத்தைச் சோ்ந்த தில்லைநம்பி (25) உள்ளிட்ட 6 போ் முன்விரோதத்தில் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, பைசல், தில்லைநம்பி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்; 4 பேரைத் தேடி வருகின்றனா்.

தில்லைநம்பியின் பெயா் ரௌடிகள் பட்டியலில் உள்ளது. அவா் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com