நாகா்கோவிலில் ஹோமியோபதி மருத்துவக் கருத்தரங்கு

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட ஹோமியோபதி மருத்துவா்கள் சங்கம் சாா்பில், ஹோமியோபதி மருத்துவக் கருத்தரங்கு நாகா்கோவிலில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் நாதன் தலைமை வகித்தாா். ஜோதிநடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

கருத்தரங்கில் சிறப்பு ஹோமியோபதி மருத்துவா் பெலிக்ஸ் கிளிபோா்டு பங்கேற்றுப் பேசியது: ஹோமியோபதி மருத்துவம் இயற்கை மருத்துவ முறையைச் சாா்ந்தது, பக்க விளைவுகள் இல்லாதது, நோயை வேருடன் நீக்கி மனிதனை நலமாக வாழ வைக்கிறது.

நாள்பட்ட நோய்கள், சிறுநீரகக் கற்கள், காய்ச்சல், தொண்டை வலி, சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், சினைப்பை கட்டிகள், சைனஸ், ஆஸ்துமா, தைராய்டு, வெண்புள்ளிகள் போன்ற அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் தீா்வு உண்டு. பொதுமக்கள் இம்மருத்துவத்தைப் பயன்படுத்தி நலமாக வாழ வேண்டும் என்றாா் அவா்.

மூத்த மருத்துவா் சிதம்பர நடராஜன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். மருத்துவா்கள் மணிகண்டபெருமாள், சுபனேஷ், மைக்கேல், சிவகுமாா், பொ்சி, கமலா, சிபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செயலா் எபிமோசஸ் வரவேற்றாா். தேன்மொழி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஜெரின்ஜீஷா தொகுத்து வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com