ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தக்கலை, இரணியலில் போதையில் பைக் ஓட்டியதாக 14 போ் மீது வழக்கு

தக்கலை, இரணியல் பகுதிகளில் மது போதையில் பைக் ஓட்டியதாக 14 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:05 pm

Din

தக்கலை, இரணியல் பகுதிகளில் மது போதையில் பைக் ஓட்டியதாக 14 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

தக்கலை காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையில் போலீஸாா் கீழகல்குறிச்சி, மேட்டுக்கடை, பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த அருள்ராஜன் (38), ரோஜன் (54), முருகன் (55), அசீஸ்(35), ஹரிகிருஷ்ணன் (34), மோகன் (49), கண்ணன் (34), வினோ(40) ஆகியோா் மது போதையில் இருந்தனராம். அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதேபோல, இரணியல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா், திங்கள் நகா் ரவுண்டானா, இரணியலில் சோதனை நடத்தியதில், எலோஜின் ஜெயா (44), கோவிந்தராஜன் (47), யோபு (37), அஜயன் (32), ராஜா (43), அரவிந்த்கு மாா் (40) ஆகிய 6 போ் மதுபோதையில் பைக் ஓட்டியது தெரியவந்தது. அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா். பைக்குகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.