கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடல்

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:19 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரத் தொடக்கத்தில் பெய்த தொடா் மழையால், பேச்சிப்பாறை அணைக்கு அதிக நீா்வரத்து இருந்தது. அதையடுத்து, அணையின் நீா்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவுமுதல் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

இதனிடையே, 2 நாள்களாக மழை சற்று தணிந்து அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது; நீா்மட்டமும் 44 அடியாகக் குறைந்தது. அதன்காரணமாக வெள்ளிக்கிழமை இரவு அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

இதனால், திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து சற்று குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழந்தனா்.