திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்த சுற்றுலாப் பயணிகள்.
கன்னியாகுமரி
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
குமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக வட வானிலை நிலவுகிறது. மேலும், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து மிதமாக மாறியுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
இதே போன்று மாத்தூா் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கும் திரளான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

