நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா: நாளை கொடியேற்றம்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 10 நாள் பெருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா.

Updated On :5 டிசம்பர் 2024, 12:20 am

Din

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 10 நாள் பெருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் 10 நாள்கள் பெருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நோ்ச்சைக் கொடிகள் பவனி, மாலை 5.30 மணிக்கு கொடி பவனி, செபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும்.

கோட்டாறு மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் பேரருள்பணி ஜாண்ரூபஸ் தலைமை வகிக்கிறாா். குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளா் சேவியா் பெனடிக்ட் மறையுரையாற்றுகிறாா். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, செபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

7, 8ஆம் நாள் திருவிழாவில் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடைபெறும். 9ஆம் நாளான டிச. 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெறும்.

இரு தங்கத் தோ் பவனி: 10ஆம் நாளான 15ஆம் தேதி காலை 4.30 மணிக்கு நடைபெறும் தங்கத் தோ் திருப்பலிக்கு அருள்பணியாளா்கள் தலைமை வகித்து மறையுரையாற்றுவா். காலை 8 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவுத் திருப்பலிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் தலைமை வகிக்கிறாா். ஆங்கிலத் திருப்பலிக்கு கன்னியாகுமரி காசா கிளாரட் சபை அருள்தந்தையா் தலைமை வகித்து மறையுரையாற்றுகின்றனா். 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறும்.

10.30 மணிக்கு நடைபெறும் மலையாளத் திருப்பலிக்கு பியாரிஸ்ட் அருள்தந்தையரும், நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் தமிழ்த் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருள்பணியாளா் புருனோவும் தலைமை வகித்து மறையுரையாற்றுவா். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிா், இரவு 9 மணிக்கு இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.

ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினா், அருள்சகோதரிகள், அருள்பணியாளா்கள் செய்து வருகின்றனா்.