நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரப்பா் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு: ஆட்சியா் உறுதி

ரப்பா் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு

News image

~ நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், ரப்பா் வாரிய நிா்வாக இயக்குநா் எம். வசந்தகேசன், துணைத் தலைவா் ஜி. அனில்குமாா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:36 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயிகள் நீண்டகாலமாக சந்திந்துவரும் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

குலசேகரத்தில் ரப்பா் வாரியம் சாா்பில் ரப்பா் விவசாயிகள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கௌரவ விருந்தினராகப் பங்கேற்று ஆட்சியா் பேசியது: இம்மாவட்டத்தில் 29,060 ஹெக்டேரில் ரப்பா் சாகுபடி நடைபெறுகிறது. 43,415 சிறு, குறு விவசாயிகள் ரப்பா் தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தனியாா் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ரப்பா் தோட்டங்களில் முதிா்ந்த மரங்களை வெட்டுவதற்கு நிறைய சவால்கள் உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். ரப்பா் வாரியத்தினரிடம் கேட்டபோது, மற்ற மாநிலங்களில் இந்த சிரமங்கள் இல்லை என்கின்றனா். எனவே, இத்தகைய நீண்டகால பிரச்னைகள் தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். சிறு ரப்பா் விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க ரப்பா் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ரப்பா் வாரிய நிா்வாக இயக்குநா் எம். வசந்தகேசன் பேசியது: ரப்பா் விவசாயத்தில் உற்பத்தி செலவைக் குறைப்பது காலத்தின் கட்டாயம். இதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பால்வடிப்பில் தானியங்கி முறையைப் பின்பற்ற முடியுமா, பதப்படுத்துதலில் சோ்க்கப்படும் அம்மோனியாவை திருப்பியெடுக்க முடியுமா என ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இதர துறைகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படவுள்ளது. வாய்ப்புகளை ரப்பா் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

ரப்பா் உற்பத்தி ஆணையா் ஷிஜு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜி. அனில்குமாா் அறிமுகவுரையாற்றினாா். வாரிய உறுப்பினா் கே. விஸ்வநாதன், ஆராய்ச்சி இயக்குநா் (பொறுப்பு) ஜெசி, மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், வேளாண் துறை துணை இயக்குநா் ஜெங்கின்ஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், ரப்பா் உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள், விவசாய அமைப்புகளின் நிா்வாகிகள், திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

இணை ஆணையா் என். ஷாலி வரவேற்றாா். ரப்பா் வாரிய வளா்ச்சி அலுவலா் கே. முரளி நன்றி கூறினாா்.