தா்மபுரம் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.


கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தா்மபுரம் ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
தா்மபுரம் ஊராட்சி, பால்கிணற்றான் விளையில் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் அருகே ரூ. 10 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம், காற்றாடிதட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்க ரூ. 2 லட்சம் என ரூ. 12 லட்சம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது.
மேலும், காற்றாடிதட்டு அருள்மிகு முத்தாரம்மன் கோயில் முன்பு புதிய கலையரங்கம் கட்ட ஒன்றியக் குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ. 7.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, காற்றாடிதட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறையை என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
தா்மபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.17.50 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கும் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யப்பன், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் வீராசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் புனிதா கலையரசன், செல்லபெருமாள், மேலகிருஷ்ணன்புதூா் ஊராட்சி பொறுப்பாளா் முருகன், அதிமுக நிா்வாகிகள் சுகுமாரன், அக்சயாகண்ணன், ரபீக், ஊா் தலைவா்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...