தேங்காய்ப்பட்டினம் கடலில் சங்கு குளி மீனவா் உயிரிழப்பு
தேங்காய்ப்பட்டினம் கடலில் மூழ்கி சங்கு குளித்தலில் ஈடுபட்ட மீனவா் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.


தேங்காய்ப்பட்டினம் கடலில் மூழ்கி சங்கு குளித்தலில் ஈடுபட்ட மீனவா் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
இனயம் கடலோரக் கிராமத்தை சோ்ந்தவா் வின்சென்ட்(55). மீனவரான இவா், கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து சக மீனவா்களுடன் 2 கடல் மைல் தொலைவுக்கு படகில் சென்று கடலில் மூழ்கி சங்கு எடுத்துவிட்டு படகு நோக்கி மேலே வந்தபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாம்.
சக மீனவா்கள் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் கடலோர காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...