நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விசிகவினா் மீது பாஜகவினா் புகாா்

மத்திய அமைச்சா் அமித்ஷாவின் உருவப்பொம்மையை எரித்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மீது பாஜகவினா் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 11:08 pm

Din

நாகா்கோவிலில் மத்திய அமைச்சா் அமித்ஷாவின் உருவப்பொம்மையை எரித்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மீது பாஜகவினா் வடசேரி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

மக்களவையில் அம்பேதகா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து நாகா்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

அப்போது அமித்ஷாவின் உருவப்பொம்மையை எரித்ததாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜர மாவட்ட பொதுச்செயலா் ஜெகநாதன் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவருடன் மாவட்ட பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், மாநிலச் செயலா் மீனாதேவ், மாமன்ற உறுப்பினா்கள் சுனில்குமாா், ஐயப்பன், ரோசிட்டாதிருமால், ஸ்னைடா, வீரசூரபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து பாஜகவினா் வடசேரியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.