புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :25 டிசம்பர் 2024, 11:13 pm

Din

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கடந்த பல ஆண்டுகளாக கேரளத்துக்கு கடத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க ஆட்சியாளா்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலைக்கு தாது மணல் எடுப்பதால், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அணு கனிம சுரங்கம் அமைப்பதால் கதிா்வீச்சு ஏற்பட்டு அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது.

கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொண்டு வரப்பட்டு கன்னியாகுமரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் நீண்டகாலமாக கொட்டப்பட்டது. கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள், இந்த மாவட்டங்களில் 33 சோதனைச்சாவடிகளை கடந்து வரும் நிலையில், இதற்கு துணைபோன அதிகாரிகள் மீது அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, உரிய விசாரணை நடத்தி தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பழக்கம் அதிகரித்து வருவதால் குற்றச்செயல்களும் அதிகரித்துவிட்டன. இதனால், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

பல மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்வருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பயமாக உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி ரத்து என்று மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தவறானது. அதைத் திரும்ப பெற வேண்டும்.

வருகிற 2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் பாமக கண்டிப்பாக இருக்கும்.

தமிழகத்திலிருந்து கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இது பல மாநிலங்கள் தொடா்புடைய பிரச்னை என்பதால் இதனை தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா்.