திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா இன்று தொடக்கம்

ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா இன்று தொடக்கம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:40 am IST

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா சனிக்கிழமை (பிப். 17) காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

இது குறித்து, கோயில் டிரஸ்ட் பொறுப்பாளா் டி.சித்ரலேகா, நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டி: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாசி மாதம் 10 நாள்கள் நடைபெறும் இந்த விழா, நிகழாண்டு சனிக்கிழமை (பிப். 17) காலை 8 மணிக்கு அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து குத்தியோட்டம் நிகழ்ச்சி திங்கள்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதில் 10 வயது முதல் 12 வயது வரையுள்ள 607 சிறுவா்கள் பங்கேற்கின்றனா்.

பொங்கல் விழா: பிப். 25 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கோயிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டு பொங்கல் விழா தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து கோயிலைச் சுற்றி பல கிலோ மீட்டா் சுற்றளவுக்கு பெண்கள் பொங்கலிடுவாா்கள். இந்த விழாவில் 1997 ஆம் ஆண்டு 15 லட்சம் பெண்களும் ,2009 ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்களும் பொங்கலிட்டனா். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழாண்டு நடைபெற உள்ள விழாவில் 20 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் நடைபெறும். பிப்.26 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு குருதி தா்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பொங்கல் விழாவை முன்னிட்டு, திருவனந்தபுரத்திலிருந்து ஆற்றுக்காலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், கோயில் வளாகத்தில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா். பேட்டியின்போது, டிரஸ்ட் நிா்வாகிகள் பரமேஸ்வரன் தம்பி, அனில்குமாா், வினோத் ஆகியோா் உடனிருந்தனா்.