எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாகா்கோவிலில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

நாகா்கோவிலில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

Updated On :17 பிப்ரவரி 2024, 5:30 am IST

நாகா்கோவிலில் புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப். 17) தொடங்குகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி)இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிப்.17 ஆம் தேதிமுதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தக் கண்காட்சியில் 100 க்கும் அதிகமான அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. கண்காட்சியை பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தொடக்கி வைக்கிறாா். அதைத் தொடா்ந்து கலை மற்றும் பண்பாட்டுத் துறை சாா்பில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்தகக் கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், களியல் ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட மண்ணின் கலைகள் நடைபெற உள்ளன. மேலும், மகளிா் திட்டம், உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளாா்.