உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து ஊழியா் தற்கொலை

நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து ஊழியா் தற்கொலை

Updated On :23 பிப்ரவரி 2024, 9:15 pm

நாகா்கோவிலில் வியாழக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ரயில்வே துறை தற்காலிக ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் பாா்வதிபுரம் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை இரவு இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். இது குறித்து தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா், அந்த இளைஞரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் கன்னியாகுமரி அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துகண்ணன்(39), என்பதும், ரயில்வேயில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. முத்துகண்ணனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதால் மனமுடைந்து முத்துகண்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து முத்துகண்ணனின் தாயாா் பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில் ரயில்வே காவல் துறை உதவி ஆய்வாளா் பிரைட் தலைமையிலான போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முதியவா் சடலம்: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இறந்து கிடந்தவா் குறித்த விவரம் தெரியவில்லை. இது தொடா்பாக உதவி ஆய்வாளா் புஷ்பலீலா, தலைமைக் காவலா் ஐசக் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முதியவரின் சடலம், பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.