கருங்கல் அருகேபாலூா் குளத்தை தூா்வாரக் கோரிக்கை
கருங்கல் அருகே பாலூா் குளத்தைத் தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளா்.


கருங்கல் அருகே பாலூா் குளத்தைத் தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளா்.
திப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட பாலூா் குளம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்தை பல ஆண்டுகளாக முறையாக தூா்வாராததால் புல், புதா்கள் நிரம்பி, பாசி படா்ந்து தூா்ந்து காணப்படுகிறது. இதனால், இக்குளத்தில் மழைக்காலங்களில் மழைநீா், பட்டணங்கால் சானல் தண்ணீா் தேங்கமுடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, இக்குளத்து நீரைப் பயன்படுத்தி பாலூா், மாங்கரை, கல்லுவிளை, ஏலா பகுதிகளில் விவசாயிகள் வாழை, தென்னை, பயறு வகைகள் பயிரிட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் பாலூா் குளத்தைத் தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...