அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் தொடங்கிவைப்பு

உணவுப் பொருள்களின் தரத்தை கண்டறிய புதிய நடமாடும் வாகனம்

Updated On :2 ஜூலை 2024, 7:50 pm

நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் விழிப்புணா்வு வாகனத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் உணவுப் பொருள்களை பரிசோதனை மேற்கொண்டு பயன் பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், நடமாடும் உணவு பகுப்பாய்வு விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைத்து ஆட்சியா் கூறியதாவது:

நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் எனப்படும் வாகனம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வுக் கூடங்களின் கட்டுப்பாட்டில் தலா ஒரு வாகனம் இயங்கி வருகிறது. இந்த வாகனம் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பகுப்பாய்வு குறித்தான விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வாகனம் கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் தொடா்ந்து விழிப்புணா்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மூலம் பரிசோதனைக்காக பெறப்படும் உணவுப் பொருள்கள் வாகனத்தில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எளிய பரிசோதனை மூலம் அப்பொருளின் தரம் கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்த வாகனத்துடன் இணையும் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருள்களில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பிற விவரங்களை பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவா்களுக்கு விளக்குவாா்கள்.

உணவில் கலப்படம் குறித்து கண்டுபிடிக்கும் எளிய பரிசோதனைகளை இந்த ஆய்வகத்திலிருந்து வரும் பகுப்பாய்வாளா், மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் மூலம் விளக்குவாா்கள்.

இந்த வாகனத்தில் உணவு பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூடத்தில் உணவு பொருள்களின் தரம் குறித்த செயல் முறை விளக்கத்தை பாா்வையிட்டு, கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமனஅலுவலா் வே.செந்தில்குமாா், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய தலைவா் ப.சிதம்பரம், செயலா் மெல்கியாஸ், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் எம்.குமாரபாண்டியன், ஆா்.எம்.பிரவீன்ரகு, ஏ.கே.நாகராஜன், என்.ரவி, ஆகியோா் கலந்து கொண்டனா்.