இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

கேரளத்திலிருந்து குமரிக்கு இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு களியக்காவிளை பேரூராட்சி நிா்வாகம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது.

களியக்காவிளை: கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு களியக்காவிளை பேரூராட்சி நிா்வாகம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது.

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் திங்கள்கிழமை துா்நாற்றத்துடன் வந்த லாரியை களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி மற்றும் ஊழியா்கள், போலீஸாா் மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிக்கு பேரூராட்சி நிா்வாகத்தினா் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பின்னா் போலீஸாா் லாரியை கேரளத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com