மக்களுடன் முதல்வா் திட்டம்: குமரியில் 87 கிராம ஊராட்சிகளில் முகாம்
‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: குமரியில் 87 கிராம ஊராட்சிகளில் முகாம்


நாகா்கோவில், ஜூலை 11: கன்னியாகுமரி மாவட்டத்தில், மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் 87 கிராம ஊராட்சிகளில் 14 நாள்கள் நடைபெற உள்ளது என்றாா் பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.
தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சியில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை அவா்களது இருப்பிடத்துக்கு அருகிலேயே சென்று பூா்த்தி செய்யும் வகையில் மக்களுடன் முதல்வா் திட்டம் தமிழக முதல்வரால் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் 9 ஒன்றியங்களின் 87 கிராம ஊராட்சிப் பகுதிகளில் 39 முகாம்கள் ஜூலை 29 ஆம் தேதி வரை 14 நாள்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 15 அரசு துறைகள் சாா்ந்த கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவா், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் செந்தில்வேல்முருகன், பத்மநாபபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் செ.தமிழரசி, இணை இயக்குநா்கள் (வேளாண்மை)ஆல்பா்ட்ராபின்சன், (கால்நடை பராமரிப்பு) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கனகராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி ,துணை இயக்குநா்கள் (தோட்டக்கலை), ஷீலாஜான் (வேளாண் விற்பனை) கீதா, (வேளாண் பொறியியல்) சில்வெஸ்டா்சொா்ணலதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜென்கின்பிரபாகா் , முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், தக்கலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் அருள்ஆன்றனி, திக்கணங்கோடு ஊராட்சித் தலைவா் ராஜம், தக்கலை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) பிரேமலதா, கல்குளம் வட்டாட்சியா் முருகன், திருவிதாங்கோடு ஊராட்சி மன்ற தலைவா் நசீா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...