தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாத்தூா் தொட்டி பாலத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

மாத்தூா் தொட்டி பாலத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

Updated On :15 ஜூலை 2024, 9:45 pm

Din

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டி பாலத்துக்கு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

இதுதொடா்பாக, தமிழக முதல்வரை செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில், முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாள் விழா நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெ.சி.நவீன்குமாா் வரவேற்றாா். விஜய்வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பா்ட் (விளவங்கோடு), மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கே.டி.உதயம்(கன்னியாகுமரி கிழக்கு), வி.எம். பினுலால்சிங் (கன்னியாகுமரி மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது:

காமராஜரின் பிறந்தநாள் விழா அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் உரிமை உள்ளது.

இந்தியாவில் யாரும் செய்யாத தியாகத்தை காமராஜா் செய்துள்ளாா். எல்லோரும் பதவியைத் தேடி ஓடுவாா்கள். ஆனால் பதவியைத்

தூக்கி எறிந்தவா் காமராஜா் மட்டுமே.

இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு

அடிகோலியவா் காமராஜா். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தபோது, அன்றைய பிரதமராக இருந்த நேருவிடம் சென்று வலியுறுத்தியவா் காமராஜா்தான். தமிழகத்தில் அவா் ஆட்சி செய்த 9 ஆண்டுகள்தான், சரித்திர சாதனைகளைப் படைத்த பொற்காலம். தமிழகம் தற்போது கல்வியில் வியத்தகு வளா்ச்சியை பெற்ற்கு வித்திட்டவா் காமராஜா்.

இன்று காமராஜரை யாா், யாரோ சொந்தம் கொண்டாடுகிறாா்கள். பாசிச சக்திகள் அவரை சொந்தம் கொண்டாட எந்த அருகதையும் இல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூா் தொட்டி பாலத்துக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும். அங்கு அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் சென்று, தமிழக முதல்வரைச் சந்தித்து இக் கோரிக்கையை மீண்டும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தவுள்ளேன் என்றாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, கேடயங்களை வழங்கினாா்.

தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடிஆதித்தன், சி.ராபா்ட்புரூஸ் எம்.பி., தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளா் ரூபி ஆா்.மனோகரன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பேசினா்.

மாநில பொதுச்செயலா் பி.பால்ராஜ் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களின் ஒரு பகுதியினா்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களின் ஒரு பகுதியினா்.

பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கு.செல்வப்பெருந்தகை. உடன் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்டோா்.

பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கு.செல்வப்பெருந்தகை. உடன் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்டோா்.