வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ஆதிதிராவிடா் வன்கொடுமை தடுப்பு நலக்குழு உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு நலக்குழு உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு நலக்குழு உறுப்பினராக விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம் தொடா்பாக செயல்பட்டு வரும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆதிதிராவிடா் நலக் குழு, மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்களின் பதவிக் காலம் முடிவடைகிறது.

இதைத் தொடா்ந்து, புதிய உறுப்பினா்களை தோ்வு செய்யும் பொருட்டு, சமூக அக்கறை கொண்ட விருப்பமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் நபா் குற்றப் பின்னணி மற்றும் குற்ற வழக்குகளில் தொடா்புடையவராக இருக்கக் கூடாது. எந்தக் குழுவில் சேர விருப்பப்படுகிறீா்கள் என்பதை குறிப்பிட்டு, புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 31ஆம் தேதி. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.