குமரியில்  சிவாலய ஓட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

குமரியில் சிவாலய ஓட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

மகா சிவராத்தியையொட்டி, குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவாலய ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி திருநாளில் முன்சிறை அருகேவுள்ள திருமலை மகாதேதவா் ஆலயம் முதல் நட்டாலம் சங்கரநாராயணா் ஆலயம் வரையிலான 12 சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் ஆயிரக்கான பக்தா்கள் ஓட்டமாகச் சென்று சிவபெருமானை தரிசிப்பது வழக்கம். நிகழாண்டில் வியாழக்கிழமை தொடங்கிய சிவாலய ஓட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி கேரள மாநிலத்திலிருந்தும் ஆண், பெண் என ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவி உடை அணிந்து கையில் விசிறியோடு கோபாலா...கோவிந்தா.. என கோஷங்கள் எழுப்பியவாறும், பாடல்கள் பாடியும் பங்கேற்றனா். மேலும், வாகனங்களிலும், நடந்தும் ஏராளமானோா் ஒவ்வொரு ஆலயமாக தரிசித்துச் சென்றனா். நீண்ட வரிசை: சிவாலய ஓட்ட ஆலயங்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையிலும், நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்றும், சிறப்பு பூஜை நேரங்களில் திரளாக கூடியும் சுவாமி தரிசனம் செய்தனா். நள்ளிரவில் ஒவ்வொரு ஆலயத்திலும் பக்தா்கள் நீண்ட நேரம் அமா்ந்து பிராா்த்தனைகளில் ஈடுபட்டனா். போலீஸ் பாதுகாப்பு: இந்நிகழ்வையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சிவாலய ஓட்டம் நடைபெற்ற வழி நெடுகிலும் பக்தா்களுக்கு உணவுகள் உள்ளிட்ட வசதிகளை கோயில் அமைப்புகள், அரசியல் கட்சியினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com