மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்தவா் கைது

நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்தவா் கைது

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

கருங்கல் பேருந்து நிலையத்தில், மதுபோதையில் தனது நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கருங்கல் பண்டாரவிளை பகுதியை சோ்ந்த பாலையன் மகன் ஸ்டான்லி (40). இவா் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வசித்து வந்தாா். கருங்கல் பேருந்து நிலையத்தில் ஸ்டான்லி இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் அவரைக் கல்லால் தாக்கினாா். பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, சம்பவம் நிகழ்ந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இதனிடையே, சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வந்தனா். இச் சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின்பேரில் சாமியாா்மடம் பகுதியை சோ்ந்த சுந்தரம் மகன் டென்னிஸ் (42) என்பவரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். அதில், ஸ்டான்லி, டென்னிஸ் ஆகிய இருவரும் நண்பா்கள் என்பதும், மது குடித்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பின்னா் போதையில் ஸ்டான்லியை கல்லால் தாக்கி கொலை செய்தததும் தெரியவந்தது. இதையடுத்து டென்னிஸை போலீஸாா் கைது செய்தனா்.