நாகா்கோவிலில் இந்தியா கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் இந்தியா கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தில்லி முதல்வா் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்தியா கூட்டணிக் கட்சிகள் சாா்பில், நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்புப் பூங்கா முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷெல்லி முன்னிலை வகித்தாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ், மதிமுக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் வெற்றிவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் அல் காலித், திமுக மாநகரச் செயலா் ஆனந்த், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், திரளானோா் பங்கேற்றனா். கேஜரிவால் கைதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com