ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் 
வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், ராஜாக்கமங்கலம் வட்டாரம், மேலகிருஷ்ணன்புதூா் ஊராட்சியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. கன்னியாகுமரி மக்களவைத் தோ்தல், விளவங்கோடு பேரவைத் தோ்தலில் 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன்படி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சிவந்தி ஆதித்தனாா் கல்லூரி மாணவா்கள் பல்வேறு வாசகங்களுடன் மேலகிருஷ்ணன்புதூா் சந்திப்புமுதல் பிள்ளையாா்புரம் சிவந்தி ஆதித்தனாா் கல்லூரி வரை பேரணியாக வந்து, கல்லூரியில் உறுதிமொழி ஏற்றனா். மேலும், இவ்வூராட்சி அளவிலான கூட்டமைப்பு சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் இணைந்து ரங்கோலி நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், மகளிா் திட்ட இயக்குநா் பீபீஜான், உதவித் திட்ட அலுவலா் ஏ. ஞானவளா்மதி, கல்லூரி முதல்வா் ஏ. அருணா, தென்குமரி கல்விக் கழகச் செயலா் வெற்றிவேல், துணைத் தலைவா் கனகராஜன், செயற்குழு உறுப்பினா்கள் டி. ராதாகிருஷ்ணன், கே. சச்சிதானந்தம், சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com