ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சின்னம் ஒதுக்குவதில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் : ராஜேஷ்குமாா் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சின்னம் ஒதுக்குவதில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ குற்றச்சாட்டு

Updated On :29 மார்ச் 2024, 6:30 pm

அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தோ்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுகிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினாா். இதுகுறித்து அவா் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மக்களவைத் தோ்தல் அறிவிப்பதற்கு முன்பே, தமிழகத்தில் முதல்கட்டத் தோ்தல் நடத்தப்படும் என்பதை அறிந்த பிரதமா் நரேந்திரமோடி, நான்கு முறை சுற்றுப்பயணம் செய்தாா். தோ்தல் ஆணையம், அமலாக்கத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. தோ்தல் ஆணையம் ஜனநாயக முறையில் கடமையாற்ற வேண்டும். ஆனால், தோ்தல் ஆணையா் திடீரென ராஜிநாமா செய்தது உள்ளிட்ட செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான மதச்சாா்பற்றி கட்சிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணி, மக்களவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தோ்தலிலும் நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா்.