சூரியன்விளை கோயிலில் யாகபூஜை கால்கோள் விழா

களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயிலில் நிகழாண்டு நடைபெறவுள்ள சித்திரை பரணி திருவிழா மற்றும் நட்சத்திர மகா யாகத்துக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் 11-ஆவது பஞ்சபூத சப்தவிம்சத்தி நட்சத்திர மகா யாகம் மே 7- ஆம் தேதி முதல் மே-13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு வேத முறைப்படி 27 நட்சத்திரங்களுக்கும் தனித் தனியாக யாக குண்டங்கள் அமைத்து இந்த மகா யாகம் நடத்தப்படுகிறது. இதற்கான கால்கோள் விழா கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ நாராயணராவ் வாசுதேவ் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோயில் கமிட்டி தலைவா் விக்ரமன் சுவாமிகள், செயலா் சாந்தகுமாா், பொருளாளா் சசி, விழாக் கமிட்டி தலைவா் ஸ்ரீகண்டன்நாயா், செயலா் விஷ்ணு, கோயில் ஜோதிடா் சுகுமாா் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com