நாகா்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்த லாரி

நாகா்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்த லாரி

நாகா்கோவில் அருகே கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்தது. நாகா்கோவிலில் இருந்து தோவாளைக்கு கனிம வளம் ஏற்றிக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. வெள்ளமடம், லாயம் சந்திப்பில் லாரி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகன பழுதுநீக்கும் நிலையத்துக்குள் சென்றது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் மற்றும் டிராக்டா் சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து அந்த லாரி, அருகிலிருந்த வீட்டுக்குள்ளும் புகுந்தது. இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் சேதமடைந்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com