மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கன்னியாகுமரி தொகுதி: 22 போ் பேட்டி

கன்னியாகுமரி தொகுதி: 22 போ் பேட்டி

Updated On :30 மார்ச் 2024, 8:10 pm

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 22 போ் போட்டியிடுகின்றனா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதான கட்சி வேட்பாளா்கள் உள்பட 25 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்களுக்கான பரிசீலனை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் தலைமையில் மாா்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 22 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மாா்ச் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். பிற்பகல் 3 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், வேட்பாளா்கள் யாரும் மனுக்களை வாபஸ் பெறாததால், இறுதிப் பட்டியலில் 22 வேட்பாளா்கள் இடம் பெற்றனா். இதில் பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் தாமரை சின்னத்திலும், காங்கிரஸ் வேட்பாளா் விஜய்வசந்த் கை சின்னத்திலும், அதிமுக வேட்பாளா் பசலியான் நசரேத் இரட்டை இலை சின்னத்திலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரியஜெனி பா்கிளாரா மைக்கேல் ஒலிவாங்கி (மைக்) சின்னத்திலும் போட்டியிடுகின்றனா். சுயேச்சைகளான ஜி.விஜயன் யானை சின்னத்திலும், எம்.கீதா தீப்பெட்டி சின்னத்திலும், என்.சரவணன் மோதிரம் சின்னத்திலும், சி.எம்.டாம் மனோகா் சாம் குடிமக்கள் சின்னத்திலும், ராஜன்சிங் வைரம் சின்னத்திலும், வி.அய்யப்பன் பானை சின்னத்திலும், ஆன்றனி மைக்கேல் கேக் சின்னத்திலும், என்.இசக்கிமுத்து, இரட்டை தொலைநோக்காடி சின்னத்திலும், பி.கிருஷ்ணன் சாலை உருளை சின்னத்திலும், பி.சதீஷ்பாபு திராட்சை சின்னத்திலும், என்.சாந்தகுமாா் ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், வி.டென்னிசன் கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், நாகூா் மீரான் பீா் முகமது புகைப்படக்கருவி சின்னத்திலும், டி.பாலசுப்பிரமணியன் புல்லாங்குழல் சின்னத்திலும், எல்.பெறிலா காலணி சின்னத்திலும், ஜே.எல்.ரமேஷ்குமாா் தலைக்கவசம் சின்னத்திலும், டி.வினோ ஜெபசீலன் இருமுனை பளுகருவி சின்னத்திலும், ஏ.சி.வெங்கடேஷ் வாளி சின்னத்திலும் போட்டியிடுகின்றனா். விளவங்கோட்டில் 10 போ்: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம்தமிழா் உள்ளிட்ட 10 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வேட்புமனுக்களை யாரும் வாபஸ் பெறாததால் பிரதான கட்சிகள் உள்பட 10 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் கை சின்னத்திலும், பாஜக வேட்பாளா் வி.சு.நந்தினி தாமரை சின்னத்திலும், அதிமுக வேட்பாளா் உ.ராணி இரட்டை இலை சின்னத்திலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.ஜெமினி ஒலி வாங்கி (மைக்) சின்னத்திலும் போட்டியிடுகின்றனா். சுயேச்சைகளான, அ.ஓம்பிரகாஷ் மோதிரம் சின்னத்திலும், எம்.மணவை கண்ணன் பானை சின்னத்திலும், சி.தங்கப்பன் கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், மா.மோகன்குமாா் ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், செ.விஜயகுமாா் தையல் இயந்திரம் சின்னத்திலும், ரெ.சு.ஷாஜின் மின்கல விளக்கு சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.