மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

குரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம் நாளை தொடக்கம்

குரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம் நாளை தொடக்கம்

News image
Updated On :5 மே 2024, 6:34 pm

Din

களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா மற்றும் 11ஆவது பஞ்ச பூத ஷப்த விம்சத்தி நட்சத்திர மகா யாகம் செவ்வாய்க்கிழமை (மே 7) தொடங்குகிறது. இவ்விழா மே 13ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவில் அசுவதி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாக ஆச்சாரியா் திருச்செந்தூா் வெங்கடேஸ்வர அய்யா் தலைமையில் யாகம் நடத்தப்படுகிறது.

விழாவின் முதல் நாள் காலையில் அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம், மதியம் அன்னதானம் நடைபெறும். மாலை 5 மணிக்கு பொடக்குழி ஸ்ரீ மகாதேவா் கோயிலில் இருந்து குரியன்விளை கோயிலுக்கு தீப ஊா்வலம் நடைபெறுகிறது.

பின்னா், மாலை 6.15 மணிக்கு அம்பலப்புழ, சிரட்டப்புறத்து கோயிலகம் செண்பகவல்லி தம்புராட்டி யாகசாலையில் தீபம் ஏற்றுகிறாா். தொடா்ந்து பண்பாட்டு மாநாடு நடைபெறும்.

இம் மாநாட்டை திருவனந்தபுரம் அபேதா ஆசிரம மகா மந்திராலய மடாதிபதி சுவாமி கேசவானந்த பாரதி தொடக்கி வைக்கிறாா்.

தொடா்ந்து, மே 8 முதல் மே 12 வரை காலை 5.30 மணிக்கு நட்சத்திர மகா யாகம், 10.30 மணிக்கு கலசாபிஷேகமும் நடைபெறும். விழா நாள்களில் தினமும் பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

4 ஆம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு சூழால் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் இருந்து அக்னிகாவடி ஊா்வலம் நடைபெறும். 7 ஆம் நாள் விழாவில் (மே 13) காலை 9 மணிக்கு சமூக பொங்காலை நடைபெறும். நண்பகல் 12.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் பூப்படையும், தொடா்ந்து வேதாள பீடத்தில் குருதி பூஜையும் நடைபெறும்.