திற்பரப்பு அருவியில் சுற்றுலா திட்டங்கள் மேம்பாடு: அதிகாரிகள் குழு ஆய்வு

திற்பரப்பு அருவி சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக அதிகாரிகள் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடந்த ஆண்டில் ரூ.4.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதியில் பணிகள் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது முடங்கிய நிலையில் உள்ளன.

இதனையடுத்து தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜின் உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழுவினா் திற்பரப்பு அருவியில் ஆய்வு மேற்கொண்டனா். குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா்

சத்தியமூா்த்தி தலைமையில், மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் மற்றும் திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி, செயல் அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வு குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு சமா்பித்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com