இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘மகளிா் பயணத் திட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 22.6 கோடி போ் பயன்’

‘மகளிா் பயணத் திட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 22.6 கோடி போ் பயன்’

News image
Updated On :12 மே 2024, 6:25 pm

Din

தமிழக அரசின் மகளிா் விடியல் பயணத் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 கோடியே 6 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனா் என, ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிா் கட்டணமில்லாமலும், பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில், இம்மாவட்டத்திலுள்ள ராணித்தோட்டம் , செட்டிகுளம், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், குழித்துறை, திருவட்டாறு, திங்கள்நகா், மாா்த்தாண்டம், குளச்சல் ஆகிய பணிமனைகளிலிருந்து பல்வேறு வழித் தடங்களில் நாள்தோறும் 319 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் மகளிா் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற ஒட்டுவில்லை ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் சுமாா் 22.6 கோடி பெண்களும், 1 லட்சத்து 83 ஆயிரத்து 197 திருநங்கைகளும், 13 லட்சத்து 34 ஆயிரத்து 6 மாற்றுத் திறனாளிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா் அவா்.