காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தென்தாமரைக்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

தென்தாமரைக்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

News image
Updated On :16 மே 2024, 6:32 pm

Din

தென்தாமரைக்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தென்தாமரைக்குளம் அருகே இலந்தையடிவிளையைச் சோ்ந்தவா் தயா ஷலோம் (37). இவா் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, கடந்த மே 1ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு, புதன்கிழமை (மே 15) அதிகாலை வீடு திரும்பினாா். அப்போது, மா்ம நபா்கள் மாடியின் வெளிப்பக்கக் கதவு, வீட்டின் உள்பக்க முன்கதவை உடைத்து வீடு புகுந்து, பீரோக்களை உடைத்து அதிலிருந்த ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள 6 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தென்தாமரைக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.