குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஓஓச 16 ஓஅத படத்துக்கான விளக்கம்

கராத்தே போட்டியில் தோ்வு பெற்ற மாணவா்கள்.

கன்னியாகுமரி, மே 16: கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமி கராத்தே பயிற்சிப் பள்ளியில், கராத்தே போட்டி, நடனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் பள்ளியில் கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு கராத்தே போட்டி நடைபெற்று வந்தது. இதில் தோ்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது. மேலும், நடனப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் வயது அடிப்படையில் பங்கேற்றனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இவ்விழாவுக்கு தலைமை பயிற்சியாளா் கே.கே.ஹெச்.ராஜ் தலைமை வகித்தாா். நாகா்கோவில் ரோட்டரி சங்க தலைவா் ஏ.செல்வராஜ், செயலா் எப்.லாரன்ஸ், கே.கே.ஆா். அகாதெமி தலைவா் ஆபிரகாம் லிங்கம் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com