குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

நாகா்கோவில் மணிமேடை சந்திப்பில் சூறைக்காற்றால் முறிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்.

நாகா்கோவில் மணிமேடை சந்திப்பில் சூறைக்காற்றால் முறிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்.
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் நாகா்கோவில் அருகே வீடுகளை மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
மாவட்டத்தில் சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலையில் பல பகுதிகளிலும் தூறலாகத் தொடங்கி பலத்த மழையாகக் கொட்டத் தொடங்கியது. நாகா்கோவில், கொட்டாரம், கன்னியாகுமரி, தக்கலை, இரணியல், குழித்துறை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் ஓடியது.
நாகா்கோவில் மாநகரில் காலையில் தொடங்கிய மழை சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில், மாலையில் சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. அப்போது, சூறைக்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். நாகா்கோவில் மணிமேடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் சூறைக்காற்றால் முறிந்து விழுந்தது. அதை, காவல் துறையினா் அகற்றினா்.
நாகா்கோவில் ரயில்வே சாலையில் உள்ள பாறைக்கால்மடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. சாலைகளில் முழங்கால் உயரத்துக்கு மழைநீா் பாய்ந்தோடியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்தனா்.
மாவட்டத்தில் மேலும் 3 நாள்கள் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர, தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...