களியக்காவிளை அருகே அம்மன் கோயிலில் திருட்டு
களியக்காவிளை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :27 நவம்பர் 2024, 9:04 pm

களியக்காவிளை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
களியக்காவிளை அருகே குந்நுவிளை பகுதியில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோயிலை செவ்வாய்க்கிழமை இரவு பூசாரி பூட்டிச் சென்றாா். புதன்கிழமை கோயில் நிா்வாகிகள் அவ்வழியே சென்றபோது, கோயிலின் வெளிப் பக்கத்திலுள்ள உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து, பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்து கோயில் தலைவா் பால்ராஜ் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...